Wednesday 8 May 2013

Naladiyar Moral Story நாலடியார் 26 கிரானைட்டை மணலாக்கியவர்


26 கிரானைட்டை மணலாக்கியவர்


 STORY BY Engineer/Lawyer.A.SRI VIJAYAN
NAALADIYAAR" POEM BY JAIN SAINTS
EXPLANATION TO THE POEM BY Prof.J.SRI CHANDRAN 

அனந்தவிஜயன் என்பவர் செல்வந்தர், தனது நண்பர் ராமசாமியை காணச் சென்றார். இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். ராமசாமி சொன்னார், “உனக்கென்னப்பா! அதிர்ஷ்டக்காரன், தொட்டதெல்லாம் பொன்னாகிறது; ஆனால் நான் எந்தத் தொழில் செய்தாலும் நஷ்டமாகிறது”
“தற்பொழுது என்ன தொழில் செய்கிறாய்?” அனந்தவிஜயன் கேட்டார். “தற்பொழுது கட்டுமானப் பொருளான மணல் கிடைப்பது தட்டுப்பாடு, ஆகையால் மாற்றுப்பொருளான கருங்கல் தூளினை கட்டிடங்களுக்கு விற்கிறேன்” என்றார் ராமசாமி.
அது நல்ல தொழில் என்றாலும், குவாரி முதலாளிகள் நிறைய கட்டுப்பாடுகள் விதிப்பதாலும், நிறைய போட்டிகள் இருப்பதாலும் லாபம் இல்லை என்றும் கூறினார் ராமசாமி.
அதனைக் கேட்ட அனந்த விஜயன் தனக்கு சொந்தமாக கிரானைட் குவாரி இருப்பதாகவும், அதனை ராமசாமிக்கு தானமாகத் தருவதாகவும், அதனை வெட்டி விற்று லாபம் சம்பாதிக்குமாறும் அறிவுறுத்தினார்.
ராமசாமிக்கு ஒரே மகிழ்ச்சி.
பிறகு, சில வருடங்கள் கழித்து, இருவரும் சந்தித்துக் கொண்டனர். ராமசாமி, “முன்னை விட இப்ப பெட்டெர், கிரானைட் மலையை முழுவதுமாக உடைத்து, அரைத்து மணலாய் விற்றுவிட்டேன். ஆனால், மலை வளர வில்லை” தற்பொழுதும் சலித்துக் கொண்டார்.
இவரை என்னவென்று சொல்வது, கிரானைட்டை தூளாக்கி விற்றவராயிற்றே.
கிருஷ்ணனும், துரோணரும், பீஷ்மரும் சேர்ந்து உதவி செய்தாலும் இவர் அர்ஜுனனாக இருந்தால்தானே உதவி முழுமை பெரும்.

பாலாற் கழீஇப் பலநாள் உணக்கினும்
வாலிதாம் பக்கம் இருந்தைக்கு இருந்தன்று
கோலாற் கடாஅய்க் குறினும் புகல்ஒல்லா
நோலா உடம்பிற்கு அறிவு.              நாலடியார் 258
பல நாளும் பாலால் கா¢யைக் கழுவி உலர்த்தினாலும் அதற்கு வெண்மையாகும் தன்மை இல்லை. அது போல, என்னதான் கோலால் அடித்துக் கூறினும் புண்ணியம் இல்லாதவனுக்கு அறிவு வராது. (தவமும் தவமுடையார்க்கு ஆகும் என்பது போல, அறிவும் புண்ணியம் இருந்தால்தான் பெற முடியும் என்பது கருத்து). 
கப்பி கடவதாக் காலைத்தன் வாய்ப்பெயினும்
குப்பை கிளைபோவாக் கோழிபோல்; - மிக்க
கனம்பொதிந்த நூல்விரித்துக் காட்டினும் கீழ்தன்
மனம்புரிந்த வாறே மிகும்.              நாலடியார் 341
நொய்யரிசியை வேண்டும் அளவு காலைப் பொழுதிலேயே வாயில் போட்டாலும், குப்பையைக் கிளறுதலை விட்டு விடாத கோழியைப் போல, மிக்க அறநெறி பொருந்திய நூற்பொருளை விரிவாக எடுத்துக் கூறினாலும் கீழானவன் தன் மனம் விரும்பிய வழியிலேயே முனைந்து செல்வான். 

2 comments:

  1. அய்யோ, அய்யோ!
    எப்படிய்யா? இப்படியெல்லாம் கதை யோசிக்கிறீங்க!.
    சூப்பரப்பு கதையிது சாமி.

    ReplyDelete
  2. கீழானவன் தன் மனம் விரும்பிய வழியிலேயே முனைந்து செல்வான் என்பது
    நூற்றுக்கு நூறு உண்மை, ஜம்புலிங்கம்.

    ReplyDelete