Monday 31 December 2012

NALADIYAR BASED STORY 14. எப்படி முடிந்தது


Hi,
This is Sri.Vishal.
I hope you may enjoy the story.
The story is based on the moral advocated by Quatrains composed by Jain Saints.
In an effort to generalise the morals in a simple way, these stories are published at the rate of one per week.
Please read and appreciate us to encourage my effort.
Thank you.
Sri.Vishal

எப்படி முடிந்தது

STORY BY Engr/Lawr.A.SRI VIJAYAN
BASED ON THE TAMIL MORAL POETRY "NAALADIYAAR"

THANKS TO Prof.J.SRI CHANDRAN FOR HIS EXPLANATION TO THE POEM

ஒரு பேருந்தில் சிலர் ஊர் ஊராக் சுற்றுலா சென்று கொண்டிருந்தனர். அவர்களில் சிலர் வணிகர்கள், சிலர் அலுவலர்கள், சில மாணவர்கள், ஒருவர் சாஸ்திரி என்று பலரும் இருந்தனர்.
ஒரு குக்கிராமத்தின் வழியாக பேருந்து சென்று கொண்டிருக்கும் பொழுது, திடீரென்று பேருந்தில் கோளாறு ஏற்பட்டு நின்று விட்டது. சுற்றுலா நிர்வாகி பயணிகளை கீழே இறக்கிவிட்டு, பழுதினை நீக்க ஏற்பாடு செய்ய ஆரம்பித்தார்.
அந்தக் கிராமத்தில், அந்தச் சமயத்தில் ஒரு திருவிழா நடந்து கொண்டிருந்தது. கிராம மக்கள் வழி முறைகளை சரியாக பின்பற்றாமல் வழிபடுவதை பயணிகளில் ஒருவராக வந்த ஸாஸ்திரி கவனித்தார்.
எனவே, அந்த மக்களை அழைத்து, தான் ஒரு ஸாஸ்திரி என்று அறிமுகப் படுத்திக் கொண்டு, எவ்வாறு கடவுளை வழிபட வேண்டும் என்கிற முறையை கற்றுக் கொடுத்தார். இந்த வழிமுறைகளை மாற்றிவிடாதீர்கள், தவறினால் கடவுளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்றும் அறிவுறை கூறினார்.
சிறிது நேரத்தில், பேருந்து பழுது நீக்கப்பட்டு புறப்பட்டது. அனைத்து பயணிகளும் பேருந்தில் அமர்ந்தனர். ஸாஸ்திரியும் சக பயணிகளுடன் அந்த கிராம வாசிகளின் அறியாமை பற்றியும், தனது அறிவுடைமை பற்றியும் ஜம்பம் அடித்துக் கொண்டு வந்தார்.
சற்று நேரத்தில், பேருந்தின் வெளியே ஏதோ ஆரவாரம் கேட்டது. அந்த கிராம மக்கள் பேருந்தை நோக்கி பறந்து வந்து கொண்டிருந்தனர். அவர்கள் சாஸ்திரியை நோக்கி வந்தனர்.
சாஸ்திரிக்கு சற்று கிலி பிடித்தது. வந்தவர்கள் அவரை வணங்கி, அவர் சொல்லிக் கொடுத்த வழிமுறையில் வரிசை மறந்து விட்டது என்றும், எதற்குப் பின் எதை செய்ய வேண்டும் என்று தெரியவில்லை என்றும், எனவே தயவு செய்து திரும்பவும் சொல்லித்தருமாறு கேட்டனர்.
சாஸ்திரியும், “அது சரி, இப்பொழுது எவ்வாறு பறந்து வந்தீர்கள்?” என்று கேட்டார்.
அவர்களும், தங்களுக்கு தெரிந்த வகையில், சாஸ்திரியை எப்படியாவது பிடிக்க வேண்டும் என்று தங்கள் கடவுளைக் கும்பிட்டு வந்ததாக கூறினர் அப்பாவியாக.
உடனே சாஸ்திரி, “உங்களுக்கு தெரிந்த வகையிலேயே வணங்குங்கள், அதை விட எந்த வழியும் சிறந்ததில்லை” என்றார்.
பக்தி என்பது எண்ணத்தில் உள்ளதே தவிர வழிமுறையிலும், ஆடம்பரத்திலும் இல்லை.

ஆவே றுருவின வாயினும் ஆபயந்த
பால்வே றுருவின அல்லவாம்; - பால்போல்
ஒருதன்மைத் தாகும் அறநெறி; ஆபோல்
உருவு பலகொளல் ஈங்கு.              நாலடியார் – 118

பொருள்:   பசுக்கள் பல்வேறு நிறத்தனவாயினும் அவை தரும் பால் வெவ்வேறு நிறமுடையதன்று; ஒரே நிறம் உடையதுதான். பாலைப் போல், அறப்பயனும் ஒரே தன்மை உடையதாகும். அவ்வறத்தை ஆற்றும் முறைகள், பசுக்களின் நிறங்களைப் போலப் பலவாகும்

Sunday 23 December 2012

NALADIYAR BASED MORAL STORY-13 யோசித்துப் பேசு


Hi,
This is Sri.Vishal.
I hope you may enjoy the story.
The story is based on the moral advocated by Quatrains composed by Jain Saints.
In an effort to generalise the morals in a simple way, these stories are published at the rate of one per week.
Please read and appreciate us to encourage my effort.
Thank you.
Sri.Vishal

STORY BY Engr/Lawr.A.SRI VIJAYAN
BASED ON THE TAMIL MORAL POETRY "NAALADIYAAR"

THANKS TO Prof.J.SRI CHANDRAN FOR HIS EXPLANATION TO THE POEM


ஒரு வகுப்பில் குப்பன் என்ற ஒரு மாணவன் பயின்று வந்தான். நல்ல குணங்கள் நிறையவே அவனிடம் இருந்தன. அனைத்துப் பாடங்களிலும் முதல் மதிப்பெண் பெறுவான். பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும், பெரியவர்களுக்கும் மரியாதை கொடுப்பதிலும் அவனுக்கு நிகர் அவன்தான்.
          இதனால் வகுப்பில் அவனுக்கு ந்ல்ல பெயர், அனைத்து ஆசிரியர்களும் அவனை பாராட்டுவர். சக மாணவர்களுக்கு உதவி செய்வதிலும் அவன் சலிப்பதில்லை, அதனால் அவனுக்கு நண்பர்களும் அதிகம்.

          அதே வகுப்பில் சுப்பன் என்ற ஒரு மாணவனும் இருந்தான். அவனும் நன்றாக படிக்கக் கூடியவன்தான், ஆனாலும் முதல் மதிப்பெண் எடுக்க முடியவில்லை. அதனால் குப்பன் மீது அவனுக்கு பொறாமை. மேலும், அவனுக்கு நண்பர்கள் அதிகமாக இருப்பதும் எரிச்சலைத் தந்தது.
அதனால், எப்படியாவது குப்பனின் நற்பெயரைக் கெடுக்க வேண்டும் என்று எண்ணம் கொண்டான். தகுந்த சமயத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். குப்பனோ, எந்தத் தவறும் செய்வதாய் இல்லை. எனவே, பொய் ஏதாவது சொல்லியாவது குப்பனை ஏதாவது இக்கட்டில் மாட்டி வைத்து விடவேண்டும் என்று தீர்மானித்தான்.
குப்பனின் நடத்தையை கெடுக்கும் வகையில் ஒரு பொய்யை உருவாக்கினான். அதை ஆசிரியரிடம் புகாராக சொல்ல தீர்மானித்து, அவரை தனியாக சந்தித்தான்.
அந்த ஆசிரியர் நல்லவர். சாதாரணமாக சுப்பன் தனியாக வரமாட்டான்! பாடத்தில் ஏதேனும் ஐயம் இருந்தாலும் வகுப்பிலேயே கேட்டு விடுவானே! ஏன் இந்த மாற்றம் என்று யோசித்தார்.
“சொல்லு, சுப்பா! நீ கொண்டு வந்திருக்கும் விஷயம் நீ நேரிடையாக ஈடுபட்ட ஒன்றா?” என்றார்.
“இல்லை” என்றான் சுப்பன்.
“சரி, உனக்கு நன்றாகத் தெரிந்த ஒன்றா? உண்மையானதா? என்றார். “அப்படி சொல்ல முடியாது, கேள்விப் பட்டது” என்றான் சுப்பன்.
“சரி, அந்த செய்தி, எனக்கு குறைந்தபட்சம் மகிழ்ச்சியாவது தருமா?” இல்லை, செய்தியைக் கேட்டால், கோபத்தில் கத்துவீர்கள் என்றான்.
“அப்படியா, சுப்பா. நன்று, போய் வா” என்றார். “ ஐயா, நான் சொல்ல வந்த செய்தி .....”
“சொல்ல வேண்டாம். உனக்கு நேரடியாக தெரியாத, உண்மையா என்று தெரியாத, எனக்கு கோபத்தை வரவழைக்கும் செய்தி வாய்மையாக இருக்காது, நல்லதாகவும் இருக்காது”
“அதை ஏன் நீ சொல்ல வேண்டும், நான் ஏன் கேட்க வேண்டும்” எனறார்.

பெறுவதொன் றின்றியும் பெற்றானே போலக்
கறுவுகொண் டேலாதார் மாட்டும் - கறுவினால்
கோத்தின்னா கூறி உரைக்கால் பேதைக்கு
நாத்தின்னும் நல்ல தினத்து              நாலடியார்-335

பொருள்: தன்னை எதிர்க்காதவரிடம் பகை கொண்டு சினத்தினால் துன்பம் தரும் சொற்களை அடுக்கடுக்காகக் கூறாவிடின் பேதையின் நாக்கை நல்ல தினவானது தின்றுவிடும்
ஒரு பயனுமின்றிப் பிறரைப் பழித்தல் பேதையர் தொழில் என்பது கருத்து