STORY BY Engineerr/Lawyer.A.SRI VIJAYAN
BASED ON THE TAMIL MORAL POETRY "NAALADIYAAR"
THANKS TO Prof.J.SRI CHANDRAN FOR HIS EXPLANATION TO THE POEM
19 தூய மனது
தரணேந்திரன் என்ற அரசன், தன் நாட்டினை செம்மையாக ஆண்டு வந்தான். ஒவ்வொரு
வேலைக்கும் தகுந்த ஆட்களை தேர்ந்தெடுத்து அமர்த்தி இருந்ததால், அனைத்து வேலைகளும்
செவ்வனே நடைபெற்றன. மக்கள் வளமாகவும், மகிழ்ச்சியுடனும் வாழ்ந்தனர். தனக்கு வேண்டியவர்,
நண்பர்கள் என்ற பாகுபாடு இல்லாமல் அரசாட்சி செய்தான்.
ஒருநாள் அரண்மனைப் பூங்காவில், சிறுவனான இளவரசன் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது, அவனது
காலில் முள் குத்தி விட்டது.
இதைக் கேள்விப்பட்ட அரசிக்கு கோபம் வந்து, பூங்காவின் நிர்வாகியை அழைத்து,
கன்னா பின்னாவென்று திட்டினாள். அப்படியும் அவளுக்கு கோபம் தீரவில்லை, தனது கணவனான
அரசனிடம் புகார் செய்தாள். பூங்காவை
சரியாக பெருக்கி தூய்மையாக வைக்காததால், தங்களது ஆசை மகனின் காலில் முள்
தைத்து விட்டது என்றாள்.
அவள் அவ்வாறு புகார் சொல்லும் பொழுது, அமைச்சரும் உடனிருந்தார்.
பூங்காவோ பெரியது, பெருக்குவது என்பது எளிதான ஒன்றல்ல, அப்படியே பெருக்கினாலும்,முள்
போன்றவை திரும்பத் திரும்ப வந்து கொண்டேதானே இருக்கும்; ஆனாலும் புகாரளிப்பது
அரசி, புண் பட்டிருப்பதோ அரசனின் செல்ல மகன், அதனால் பூங்கா நிர்வாகிக்கு பெரிய
தண்டனை கிடைக்கும் என்று எண்ணினார்.
அரசன் மறுநாள் முடிவு சொல்வதாக கூறினான்.
மறுநாள், தனது மகனுக்கு செருப்பு ஒன்று வாங்கிக் கொடுத்தான்.
கடுக்கி ஒருவன் கடுங்குறளைப் பேசி
மயக்கி விடினும் மனப்பிரிப்பொன் றின்றித்
துளக்க மிலாதவர் தூய மனத்தர்;
விளக்கினுள் ஒண்சுடரே போன்று. நாலடியார் 189
மயக்கி விடினும் மனப்பிரிப்பொன் றின்றித்
துளக்க மிலாதவர் தூய மனத்தர்;
விளக்கினுள் ஒண்சுடரே போன்று. நாலடியார் 189
பொருள்: ஒருவன் முகத்தைக் கடுமையாக வைத்துக்கொண்டு
பிறர்பற்றி மிகவும் பொல்லாத கோள் சொற்களைச் சொல்லித் தம் அறிவை மயங்கச் செய்தாலும், அப்பிறர்பால்
சிறிதும் மனவேறுபாடின்றி அசைவில்லாது இருப்பவரே, விளக்கில் ஒளிரும் சுடர் போலத் தூய மனத்தவராவர்.
புறங்கூறலைப்
பொருட்படுத்தாமையும் பெருமையாகும் என்பது கருத்து.
நல்ல கருத்து.
ReplyDeleteஇதைப் போன்ற பல கதைகளைப் படைக்க எனது வாழ்த்துக்கள்.
Un-Biased Administration.
ReplyDeleteThis story clearly tells about the requirement for a Good Administrator.
Good Moral Story.
Syed Shah
Simple Language.
ReplyDeleteI read other stories too, all are superb.
I wish the author to have been blessed for producing more stories.
Chitharanjan Doss
Super sir 👌👌👌
ReplyDelete